logo







    1. HOUSING LOAN



    புதிய வீடு கட்ட / வீட்டை விரிவுபடுத்த கடன் மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய இணைப்புகள்



Smiley face


வீட்டு கடன் பெற தகுதியுடையோர் :


1. கடன் கோருபவர் பெயரில் அடிமனைக்கு உரிமை இருக்க வேண்டும்.


2. வீட்டு மனையாகவோ / புதியதாக கட்டிக் கொண்டிருக்கும் முழுமையாக முற்றுப்பெறாத வீடாகவோ இருக்கவேண்டும்.


3. வீடு கட்டப்படவுள்ள இடம், குடியிருப்பு பகுதியாக இருக்க வேண்டும்..


4. புதிய வீடு கட்ட ரூ1,00,000/-- கடனுக்கு ரூ6000/- மாத வருமானம் இருக்க வேண்டும்..


5. மனுதாரர் வருமானம் மற்றும் குடும்ப அங்கத்தினர் வருமானம் சேர்த்துக் கொள்ளப்படும்..


6. கடன் உச்ச வரம்பு புதிய வீடு கட்ட ரூ30,00,000/- விரிவாக்கத்திற்கு ரூ3,00,000/- மட்டும்..


7. தவணைக்காலம் 180 மாதங்கள் ( விடுப்பு காலம் உட்பட)


8. வட்டி விகிதம் 12%.


9. விடுப்பு காலம் 6 மாதம் வரை


இணைப்புகள்:

1. கடன் மனுவில் கடன் கோருபவர் புகைப்படம் ஒட்டி அதில் மேலாளர் கையொப்பம் இட வேண்டும்.


2. ஊதியம் பெறுவோராயின் சம்பளம் வழங்கும் அதிகாரியிடம் சம்பளம் அத்தாட்சி.


3. இதர வருமானம் இருப்பின் தாசில்தாரிடம் வருமானச்சான்று.


4. மனுதாரரின் வயது தொடர்பான வயது சான்று.


5. குடும்ப கார்டு நகல்.


6. கிளையின் விவகார எல்லைப்பகுதியில் உள்ள வீடு கட்டும் சங்கங்கள் / இதர வங்கிகள், தொடக்க கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் இக்காரியத்திற்கு கடன் கோரவில்லை என்பதற்கான மனுதாரரின் உறுதி மொழி சான்று..


7. திட்ட மதிப்பீடு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரிடம் பெற்று மனுதாரர் கையொப்பம் இடவேண்டும்..


8. கடன் பெறுவதற்கான, அங்கீகரிக்கப்பட்ட, கட்டப்படவுள்ள வீட்டின் வரைபடம் 2 நகல்கள்.


9. வீடு கட்டுவதற்கான பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி அனுமதி.


10. வீடு விரிவுபடுத்தும் காரியமாயின் திட்ட மதிப்பீடு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் பஞ்சாயத்து அனுமதி..


ஈடுகாட்டும் சொத்திற்கு தர வேண்டிய ஆவணங்கள் :

1. அசல் பத்திரம்.


2. மூலப்பத்திரம்.


3. வில்லங்க சான்று 14/31 - ஆண்டுகளுக்கு.


4. அடிமனைக்கு - மனை வரி ரசீது - நடப்பு ஆண்டுக்கு.


5. சிட்டா, அடங்கல்.


6. பட்டா


7. நில அளவை பேரேட்டு நகல் (எப்.எம்.பி) ( வீடு கட்டவுள்ள இடத்தை மார்க் செய்து காண்பிக்க வேண்டும்)


8. (அ) நகர அளவை பேரேட்டு நகல் ( Town Survey Extract)


9. அரசு வழிகாட்டும் மதிப்பு ( சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற வேண்டும்)


10 . நிலம் / மனை பூர்வீகமாயின்


அ) 31 - வருடங்களுக்கு வில்லங்க சான்று


ஆ) 13- வருடங்களுக்கு முன்பு - யார் பெயரில் மனை இருந்தது என்பதற்கான சிட்டா நகல் /
"அ" பதிவேடு நகல் - தாசில்தார் சான்றுடன்


இ) சிட்டா , அடங்கல்


ஈ) பட்டா


உ) நில அளவை பேரேட்டு நகல்


ஊ) வம்சா வழி சான்று