அ) வீடு அடமான கடன் பெற தகுதிகள் :
1. ஈடுகாட்டும் சொத்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடமாக இருத்தல் வேண்டும்
2. வீட்டின் உரிமையாளரின் பயன்பாட்டுக்கே கடன் வழங்கப்படும்.
3. ஒருவர் வீட்டினை அடமானம் வைத்து வேறு ஒருவருக்கு கடன் வழங்க இயலாது..
4. வங்கி அதிகாரியால் நிர்ணயம் செய்யும் வீட்டின் மதிப்பில் 60 % க்கு உட்பட்டு கடன் வழங்கப்படும்.
5. திருப்பி செலுத்தும் தகுதிக்கு ஏற்ப கடன் அனுமதிக்கப்படும்.
6. மனுதாரரின் மொத்த வருமானத்தில் 1/3 மடங்கு மட்டுமே திருப்பி செலுத்தும் சக்தியாக ( அசல் + வட்டி) எடுத்துக் கொள்ளப்படும்.
Particulars | loan Amount | Interest |
---|---|---|
6.(i) மனுதாரரின் வருவாய் தகுதி 2107 X 3 = 6321 ( உத்தேசமாக ஒருவர் ரூ 1/- லட்சம் கடன் பெற வேண்டுமாயின் அவருக்கு மாதம் வருமானம் ரூ 6321 /- வர வேண்டும்).
6.(ii) மனுதாரரின் மாத வருவாயோடு அவரை சார்ந்துள்ள அவரது மனைவி / கணவன், மகள்கள், மகன் கள்
ஆகியோரது வருவாய்களையும் திருப்பி செலுத்தும் சக்திக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இவர்களை இணை மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்.
7. திருப்பி செலுத்தும் காலம் 120 மாதங்கள்.
8. வட்டி விகிதம் 12.5%.
9. கடன் வழங்கும் காரியங்கள் : அ) வியாபார அபிவிருத்தி ஆ) வீடு பழுது பார்த்தல் / புதுப்பித்தல்
10. மனுதாரருக்கு வயது 50-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
11. கடன் அளவு ரூ 20/- லட்சம் வரை.
இணைப்புகள் :
1. வீட்டின கிரையப்பத்திரம் ஒரிஜினல்.
2. மூலப்பத்திரம் ஒரிஜினல்.
3. வில்லங்க சான்று ( 14 ஆண்டுகளுக்கு).
4. நடப்பு ஆண்டுக்கு வீட்டு வரி ரசீது.
5. வீட்விற்கு பொறியாளரது விரிவான மதிப்பீடு
6. வீட்டின் வரைபடம்
7. வயது சான்றிதழ்
8. வருமான சான்றிதழ்
9. புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை நகல்
10. வீட்டின அடிமனைக்கு அரசு வழிகாட்டும் மதிப்பு ( கிளைமேலாளர் பெற வேண்டும்)
11. கடன் கோரும் காரியத்திற்கான சான்று
12. திட்ட அறிக்கை
13. வீட்டின் புகைப்படம்
14. டவுன் சர்வே ரெஜிஸ்டரி எக்ஸ்ட் ராக்ட் / சிட்டா அடங்கல் பட்டா
15. நில அளவை பேரேட்டு நகலில் ( (FMB) ஈடுகாட்டும் சொத்து அமைந்துள்ள இடத்தை மார்க் செய்து காட்டவேண்டும்.
16. மனையின் மதிப்பு குறித்து VAO -விடம் சான்று பெற வேண்டும்..
17. நிலம்/ மனை / வீடு பூர்வீகமாயின்.
அ) 31 - வருடங்களுக்கு வில்லங்க சான்று.
ஆ) 13- வருடங்களுக்கு முன்பு - யார் பெயரில் மனை இருந்தது என்பதற்கான சிட்டா நகல் / "அ" பதிவேடு நகல் - தாசில்தார் சான்றுடன் .
இ) சிட்டா , அடங்கல்.
ஈ) பட்டா .
உ) நில அளவை பேரேட்டு நகல்
ஊ) வம்சா வழி சான்று